↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
Masss Movie Gallery
சூர்யா நடித்து வரும் 'மாஸ்' படத்தில் இடம்பெறும் சூர்யாவின் அறிமுகப்பாடல் தூத்துக்குடியில் படமாக்கப்பட்டு வருவதாகவும், இன்று முதல் இந்த படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தூத்துக்குடியில் படமாக்கப்பட்டு வரும் இந்த பாடல் காட்சிக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைத்து வருகிறார். இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கி வரும் 'மாஸ்' திரைப்படம் த்ரில் மற்றும் காமெடி காட்சிகள் சரியான அளவில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் இடம்பெறும் பல்கேரிய நாட்டு காட்சிகள் தமிழ் சினிமாவிற்கு முற்றிலும் புதியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா இரு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், கருணாஸ், சமுத்திரக்கனி, ஸ்ரீமான் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top