மேற்கிந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சுனில் நரீன் உலகக்கிண்ண போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்று இருந்தார்.
ஆனால், தற்போது அவர் விலகியுள்ளதாக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் அவரது பந்து வீச்சு குறித்து சாம்பியன் லீக் போட்டியில் சந்தேகம் எழுப்பப்பட்டது.
அவரது பந்து வீச்சு முறையற்றதாக இருப்பதாக கூறி இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தனது பந்து வீச்சை சரி செய்வதற்காக சுனில்நரீன் உலகக்கிண்ண போட்டியில் இருந்து விலகியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கேள்வி எழுப்பும் முன்பு அவர் விலகியதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக மாற்று வீரரை மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Post a Comment