↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் காலத்திலும் அதன் பின்னரும் தமக்கும் தமது குடும்பத்திற்கும் கடுமையான சேறு பூசல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மஹிந்த ராஜபக்ஸ, விசேட ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நபர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உண்டு எனவும், அதனை விடுத்து ஊடகங்களைப் பயன்படுத்தி கடுமையான சேறு பூசல்களை மேற்கொள்வது எந்த வகையில் நியாயமாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னொருபோதும் இல்லாத வகையில் தமக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகவும் சேறு பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் மக்கள் பிழையாக வழிநடத்தப்படக் கூடுமெனவும் அதனை தடுக்கும் நோக்கில் தாம் இந்த விடயத்தை தெளிவுபடுத்த முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதன் மறுநாள் அதாவது 9ம் திகதி அதிகாலை வேளையில் இராணுவ சூழ்ச்சி மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதும், பொய்யானதுமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலனறுவையில் ஆற்றிய உரை என்னை கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பதவியை விட்டு விலகியதன் பின்னர் நிம்மதியாக இருக்கவே தாம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் தாமும் தமது குடும்பத்தினர் மக்கள் பணத்தில் ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளுக்காக அலரி மாளிகையில் சர்வதேச தரத்திற்கு அமைய சில விடயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் ஒன்றே ஊடகங்களில் காண்பிக்கப்பட்ட காற்று சீராக்கியுடன் கூடிய மலசலகூடமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்முடைய உருவப்படம் பொறித்த பரிசுப் பொருட்கள் மீட்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டு வருவதாகவும் இவ்வாறு பொருட்கள் வைத்திருப்பதில் தவறில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது மனைவி 100 கிலோ தங்க மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அது குறித்து காவல்துறையினர் பதிலளித்துள்ளதனால் தாம் அது குறித்து பேச விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
லம்போகினி வாகனங்களுக்கு ஓரளவு நிகரான வாகனங்களை உடைய வீடுகளுக்கு காவல்துறையினர் சென்று அவற்றை சுற்றி வளைக்கும் ஓர் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தமக்கு இன்னமும் உத்தியோகபூர்வ இல்லம் கிடைக்கவில்லை எனவும், அது வரை காலமும் தமது பொருட்களை கொள்கலன்களில் வைத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பொருட்களை காவல்துறையினர் சோதனையிட்டு இவை களவாடப்பட்ட பொருட்கள் போன்று பிரச்சாரம் செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்கள் தனியொரு நபரினால் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், நிபுணர்கள் அடங்கிய குழுவினரின் பரிந்துரைகளுக்கு அமையவே அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொடர்ச்சியாக தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேறு பூசப்பட்டு வருவதாகவும் இது குறித்து மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த விடயங்களை குறிப்பிட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
House MR

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top