குழந்தைகள் என்றாலே சந்தோஷம் தான். அதிலும் ஒரு வீட்டில் பெண் குழந்தை இருக்கிறது என்றால் சொல்லவா வேண்டும், அவர்களை மடியில் வைத்து கொண்டாடுவார்கள்.
ஏனெனில் என்றாவது ஒரு நாள் வேறு ஒருவர் வீட்டிற்கு செல்ல போகிறாள் என்பதற்காக, தந்தை தன் மகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்வார்.
தற்போது ராஜ்குமார் மோகன் இயக்கத்தில் வெளிவரும் ராக்கிளி பொன் மகள் டீசர் பெண் குழந்தையை மையமாக கொண்ட கதை என்பது போல் தெரிந்தாலும், எந்த மாதிரியான கதை என்பதை யூகிக்க முடியவில்லை.
இருந்தாலும் அந்த குழந்தை மிக அழகாக பாடல் வரிகளுக்கு தன் குட்டி குட்டி முகபாவனைகளில் நம்மை ஈர்க்கிறார். விரைவில் இக்குறும்படம் வெளிவந்து வெற்றி பெற சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள். இப்படம் பிப்ரவரி 8ம் தேதி சென்னை ஏவிஎம் ப்ரிவ்யூ திரையரங்கில் திரையிடப்படுகிறது.
0 comments:
Post a Comment