இந்திய சினிமா நட்சத்திரங்கள் இணைந்து விளையாடும் கிரிக்கெட் தொடர் தான் சிசிஎல்.
இந்த தொடரில் தமிழ் சினிமா நடிகர்களின் சென்னை ரைனோஸ் அணி கேரளா, மராத்தி, மும்பை அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
இதனையடுத்து இன்று ஹைதராத்பாத்தில் நடந்த அரையிறுதி போட்டியில் கர்நாடகா புல்டோசர்ஸ் அணியுடன் மோதியது.
முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் அணித்தலைவர் ஜீவா 3 விக்கெட்டும், விக்ராந்த், செல்வன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய சென்னை அணி 19.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பில் 162 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்று இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தது. 91 ஓட்டங்கள் எடுத்த விக்ராந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment