உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 14ம் திகதி தொடங்குகிறது. 15 பேர் கொண்ட இந்திய அணியில் தொடக்க வீரராக ஷிகார் தவான் உள்ளார்.
ஆனால் அவரது துடுப்பாட்ட விதம் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாதிக்க தவறிய அவர் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியிலும் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.
இதுவரை இந்தியா விளையாடிய 3 ஆட்டத்தில் தவான் முறையே 2,1 மற்றும் 8 ஒட்டங்களில் ஆட்டம் இழந்தார்.
உலகக்கிண்ண போட்டி தொடங்க இன்னும் 17 நாட்களே இருக்கும் வேளையில் தவானின் மோசமான ஆட்டம் உலகக்கிண்ண போட்டியில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்று அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.
0 comments:
Post a Comment