↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கத்தால் இதயத்தை பாதிக்கும் காரணிகள் ஏராளம்.
இவற்றில் இருந்து விடுபட, சீரான வாழ்க்கை வாழ இயற்கை நமக்கு அளித்த கொடைகள்தான் பழங்களும், காய்கறிகளும்.
இதயம் மற்றும் உடல் உறுப்புகளைக் காக்க இதோ சில உணவு வகைகள்,
* விளாம்பழத்தில் இருந்து கல்லீரல் மற்றும் இதயக் கோளாறுக்கான டானிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. விளாம்பழம் வயிற்றுபோக்கையும், வயிற்றுக்கடுப்பையும் நிறுத்தும் குணம் கொண்டது.
வெயில் காலத்தில் அடிக்கடி தாகம் எடுக்கும்போது விளாம்பழம் சாப்பிடலாம். அடிக்கடி நெஞ்சுவலி ஏற்படும் நபர்கள் விளாம்பழத்தைச் சாப்பிட்டுவர அது சரியாகும்.
* அடிக்கடி நெஞ்சுவலி ஏற்பட்டால், மாத்திரை மருந்து சாப்பிடுவதைவிட உளுந்து மாவைக் களியாகக் கிண்டி சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம், நெஞ்சு வலியும் போகும்.
* மாரடைப்பு, இதயநோய் வராமலிருக்க அடிக்கடி உணவில் வெங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* நெஞ்சுவலி வந்தால் பேரீச்சம்பழத்தை அப்படியே கொட்டையுடன் இடித்துப் பிசைந்து, கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக மென்று விழுங்குங்கள். அதில் இரும்புச் சத்து நிறைந்துள்ளதால், நெஞ்சுவலியை எளிதில் குணப்படுத்தும்.
* குப்பைமேனி இலையை உலர்த்தி இடித்து மெல்லிய துணியில் சலித்துக்கொண்டு, சமமாகச் சர்க்கரை சேர்த்து, 200 மி.லி. பசுவின் பாலில் கலந்து, காலையில் மட்டும் சாப்பிட்டு வரவும். இவ்வாறு 15 நாட்கள் சாப்பிட்டால் மார்பு வலி நீங்கி தேகத்துக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
* ஒரு நெல்லிக்கனியில் நான்கு ஆப்பிள்களுக்கு இணையான சத்துகள் உள்ளன, இதனை 'ஜாம்' ஆகவும், லேகியமாகவும் செய்து சாப்பிடலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top