↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி உலகம் முழுவதும் மிக பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தயாராக உள்ளது. இந்நிலையில் இந்த படம் யூ/ஏ சர்டிபிகேட் பெற்றதால் ரிவைசிங் கமிட்டியில் இதன் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் விண்ணப்பித்திருந்தார். ரிவைசிங் கமிட்டியில் இந்த படத்தை நேற்று பார்த்த அதிகாரிகள் 'என்னை அறிந்தால்' படத்திற்கு கொடுக்கப்பட்ட யூ/ஏ சர்டிபிகேட்டை உறுதி செய்துள்ளனர். இதனால் இந்த படத்திற்கு அரசின் வரிவிலக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

அஜீத்தின் முந்தைய இரண்டு படங்களான வீரம், ஆரம்பம் ஆகிய இரு படங்களும் க்ளீன் யூ' சர்டிபிகேட் பெற்ற நிலையில் இந்த படம் மட்டும் யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்திருப்பது படக்குழுவினர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அஜீத், அனுஷ்கா,த்ரிஷா, அருண்விஜய், விவேக் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கவுதம் மேனன் இயக்கியுள்ள இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top