அதாவது, கடந்த காலாண்டில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி உலக சாதனை படைத்துள்ளது.
வணிக நிறுவனம் ஒன்று இந்த அளவு பெரிய லாபத்தொகையை பதிவு செய்துள்ளது உலகளவில் இதுவே முதல் முறை என்று ஹோவர்டு சில்வர்பிளாட் என்ற மதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த பண்டிகை சீசனில் அப்பிள் ஃபோன்கள் விற்பனை எதிர்பார்த்ததை விட அதிகளவில் விற்பனையானதும், குறிப்பாக சீனாவில் விற்பனை அதிகரித்ததுமே மிகப்பெரும் லாபத்துக்கு காரணமாக அமைந்தது என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அப்பிளின் iOS 9 விரைவில் அறிமுகம்
அப்பிள் நிறுவனம் நேற்றைய தினம் iOS 8.1.3 எனும் தனது புதிய இயங்குதளப் பதிப்பினை அறிமுகம் செய்துள்ளது.
இதேவேளை இந்த வருடம் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் அளவில் iOS 9 இயங்குதளத்தினை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் எதிர்வரும் ஜுன் மாதம் இடம்பெறவுள்ள World Wide Developer Conference நிகழ்வில் விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய சாதனங்கள் iOS 9 இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.