↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
எனக்கு கடவுள் கொள்கை உள்ளது. என்மீது கைவைத்த எவரும் சிறந்து வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என்னை அலரிமாளிகையில் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினார்கள்.
அன்றுதான் நினைத்தேன் மஹிந்தவிற்கு வீடுசெல்ல காலம் தொலைவில் இல்லை என்று. என்னை அடித்து இரண்டு பௌர்ணமிகள் முடிவதற்கு முன்னர் மஹிந்த இல்லாமல் போய்விட்டார். ஆனால், இந்த மேர்வின் அன்று இன்றும் ஒன்றுதான் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
தன்னை தாக்கிய சம்பவம் குறித்து மேர்வின் மேலும் விபரிக்கையில்; உங்களுக்கு நினைவிருக்கும் நான் களனியில் விடுதி ஒன்றை இழுத்து மூடியவிதம். விடுதி உரிமையாளர்கள் இதுகுறித்து பஷில் திருடனுக்கு அறிவித்துள்ளனர். பஷில் அதுபற்றி ஜனாதிபதியிடம் ஒன்றுக்கு இரண்டாக தொலைபேசியில் போட்டுக் கொடுத்துள்ளார். திடீரென என்னை அலரி மாளிகைக்கு வரும்படி தொலைபேசி அழைப்பு வந்தது. நான் உடனே அங்கு சென்றேன்.
என்னைக் கண்டதும் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றார். நான் எதும் இரகசியம் சொல்லவோ என நினைத்தேன். திடீரென என்னை தாக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் நான் ஒருபொழுதும் கைநீட்டவில்லை. பின் வெளியே வா என்று தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றார்.
நான் அதன்பின் அங்கு இருக்கவில்லை. உடனே ஜீப்பில் ஏறினேன். என் நிலையை பார்த்து ஏன் சேர்? என்று எனது பாதுகாப்பு தரப்பினர் கேட்டனர். அப்போது நான் அழுதேன். அதன்பின் நான் எனது மனைவிக்கு (லுசிடாவுக்கு) அழைப்பெடுத்து நடந்ததை கூறி அழுதேன். அதனை பாதுகாப்பு பிரிவினர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறினார். தற்போது போகும் நிலையை பார்த்தால் ஜனாதிபதிக்கு இறுதி காலம் நெருங்கிவிட்டது சேர் என்றார். நான் பொய் சொன்னால் அவரையே கேளுங்கள். இதோ உள்ளார் அவர் என்று மேர்வின் கூற குறித்த செய்தியாளர் அவரை பார்த்தபோது அவர் தலை அசைத்து உண்மை என்று கூறியதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதுகுறித்து மேலும் விவரித்த மேர்வின்; எனக்கு முன்னர் இவ்வாறு பலரை மஹிந்த தாக்கியுள்ளார். பஸ் கெமுனு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, முன்னாள் புலனாய்வு பிரிவு தலைவர் வாகிஸ்ட போன்றோர். அனைத்து பெயர் விபரங்களையும் மஹிந்தவின் பி.எஸ்.ஓ. மேஜர் நெவில் சில்வா அறிவார். காரணம் பிடிக்கச்சென்று அவரும் நிறைய அடி வாங்கியுள்ளார்.
மஹிந்த பெலியத்தையில் இருந்த மதம்பிடித்தவர். ஜனாதிபதி பதவி போன்று உன்னத பதவி மதம்பிடித்தவருக்கு கிடைத்தால் அதனை செய்ய முடியாது. ரணில் – சந்திரிக்கா போன்றவர்கள் பக்கத்தில்கூட மஹிந்தவை வைத்திருக்க முடியுமா? குடித்தால் வெறியன். நாம் இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்தது உலக வெட்கம் என்று மேர்வின் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top