↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

பிரமாண்ட இயக்குநர் ஷங்கர், ஐ படத்திற்கு பிறகு தனது அடுத்தபட வேலைகளில் களம் இறங்கிவிட்டார். சமீபத்தில், அமீர்கான் நடிப்பில் இந்திய அளவில் பெரும் வசூல் சாதனை புரிந்த பி.கே. படத்தை, ஷங்கர், தமிழில் ரீ-மேக் செய்ய இருப்பதாகவும், இப்படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. மேலும் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் விஜய்யும் பங்கேற்றதால், அடுத்தபடம் விஜய்-ஷங்கர் கூட்டணியாக இருக்கும் என உறுதியாக சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஷங்கர் அடுத்தப்படியாக தமிழ் படத்தை இயக்க போவதில்லையாம். மாறாக இந்தியில் ஒரு படத்தை இயக்க போகிறாராம். அதுவும் அமீர்கானை வைத்து படம் இயக்க உள்ளாராம். சுமார் 6 மாதத்திற்கு முன்பே ஷங்கர் கதையை ரெடி பண்ணிவிட்டாராம். தற்போது அந்த கதைக்கு இறுதி வடிவம் கொடுத்து வருகிறாராம். விரைவில், ஷங்கர்-அமீர் இணையும் படத்திற்கான அறிவிப்பு வௌியாகும் என்று ஷங்கருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜய்யை வைத்து அவர் பி.கே படத்தை ரீ-மேக் செய்யவில்லை என்றும் உறுதியாக கூறுகிறார்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top