![](http://entertainment.chennaipatrika.com/image.axd?picture=2014%2F12%2FKarthi-Komban-Poster.jpg)
கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி கார்த்தி, தமன்னா நடித்த 'பையா' திரைப்படம் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்றது. லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த பையா'. கார்த்திக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.
சரியாக ஐந்து வருடங்கள் கழித்து இவ்வருடம் அதே ஏப்ரல் 2ஆம் தேதி அவர் நடித்த 'கொம்பன்' ரிலீஸாகவுள்ளது. இதனால் செண்டிமெண்டாக இந்த படமும் பையா' போலவே மாபெரும் வெற்றியடையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண்,கருணாஸ், தம்பி ராமைய்யா, கோவை சரளா மற்றும் பலர் நடித்த கொம்பன், படத்தை எம்.முத்தையா இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே குட்டிப்புலி' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும், பிரவீண் எடிட்டிங்கும் செய்துள்ளார். ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜ இந்த படத்தை தயாரித்துள்ளார்.
0 comments:
Post a Comment