
தமிழ் சினிமாவில் திடிரென அறிமுகமானபோதே பிரபலமானவர் பவர்ஸ்டார்.
எப்போதும் விளம்பரத்திலேயே குறியாக இருக்கும் இவர் பல வழக்குகளில் சிக்கி தற்போது தான் முழுவதுமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால் ஏதாவது சொல்லி சர்ச்சையை கிளப்புவார். அந்தவகையில் இன்று நடைபெற்ற தொப்பி என்ற படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கலந்துகொண்ட பவர்ஸ்டார் தயாரிப்பாளர்கள் சரியாக சம்பளம் தராமல் தொப்பி மாட்டி விடுகின்றனர் என்று பேசினார்.
இதனையடுத்து பேசிய நடிகர் சிங்கம்புலி, தயாரிப்பாளர் டி.சிவா ஆகியோர் இதுபோல் தயாரிப்பாளர்களை சபையில் வைத்து தரக்குறைவாக பேசுவது அழகல்ல என்று கூறி பவர்ஸ்டாரை வெளுத்து வாங்கிவிட்டனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.