↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எஸ்.ஜே.சூர்யாவின் 'இசை' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய மாறுதலை எஸ்.ஜே.சூர்யா செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

'இசை' படத்தின் ஏழு நிமிட காட்சிகளை எஸ்.ஜே.சூர்யா ட்ரிம் செய்திருப்பதாகவும், ட்ரிம் செய்யப்பட்ட படம் இன்று மாலைக்காட்சி முதல் தியேட்டர்களில் வெளியாகும் என்று செய்திகள் கூறுகின்றன.

த்ரில், சஸ்பென்ஸ், க்ளைமாக்ஸ் ஆகியவற்றால் படம் சமூக வலைத்தளங்களின் பயனாளிகளால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த பாராட்டுக்களுக்கு எஸ்.ஜே.சூர்யா அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, சாவித்திரி, சத்யராஜ், ஜெயப்பிரகாஷ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், கஞ்சா கருப்பு மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இசையமைத்து இயக்கியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top