இந்நிலையில் சிரஞ்சீவியின் 150வது படத்தை எந்த இயக்குனர் இயக்கினாலும் நன்றாக இருக்காது என தாக்குதல் தொடுத்திருக்கிறார் இயக்குனர் ராம் கோபால் வர்மா.இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியது:சிரஞ்சீவி தனது 150வது படத்தை எந்த இயக்குனரிடம் ஒப்படைப்பது என்று யோசித்து வருகிறார். அவர் படத்தை எந்த இயக்குனர் இயக்கினாலும் அது சாதாரண படமாகவே இருக்கும். அதில் எந்த சிறப்பும் இருக்காது. இப்படத்தை சிரஞ்சீவியே இயக்குவதுதான் பொருத்தமாக இருக்கும். இது பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும். இந்த முடிவை எடுக்காமல் வேறு யாரிடமாவது படத்தின் இயக்குனர் பொறுப்பை ஒப்படைத்தால் அது மிகப்பெரிய தவறாகிவிடும். பிரஜா ராஜ்யம் கட்சியை தொடங்கியதைவிட அது பெரிய தவறாக இருக்கும்.இவ்வாறு வர்மா கூறியிருப்பது தெலுங்கு படவுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி சிரஞ்சீவி கருத்து எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார்.
0 comments:
Post a Comment