↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்யை கவர்ந்த எமி ஜாக்ஸன்! ஸ்பெஷல் - Cineulagam
தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட் சினிமா வரை கதாநாயகி என்றாலே வெள்ளை நிற தேகத்துடன் தான் இருக்க வேண்டும் என்பது விதி. அப்படியிருக்க ஒரு வெள்ளை கார பெண்ணே நம் நாட்டு சினிமாவில் நடித்தால் எப்படியிருக்கும்.
பார்க்க நன்றாக இருக்கும், ஆனால், காலத்திற்கும் தான், நிற்க முடியாது என்று பலர் கூறிய போதிலும் அதையெல்லாம் உடைத்து தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் எமி ஜாக்ஸன்.
மதராசபட்டிணம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான எமி, லண்டனில் பெரிய மாடல். இவரை யதார்த்தமாக பார்த்த இயக்குனர் ஏ.எல்.விஜய் உடனே தன் படத்தில் கமிட் செய்ய, படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து பாலிவுட் பக்கமும் ஒரு கை பார்த்து விடலாம் என ஏக் தீவானா தா என்ற ஹிந்தி படத்தில் நடித்தார், இப்படத்தின் ரிசல்ட் இவருக்கு அதிர்ச்சியை தான் தந்தது. பிறகு இவர் நடித்த தாண்டவம் படமும் பெரிதாக ஓடவில்லை.
ஆனால், பொறுமையாக தன் திறமையையும் மட்டும் நம்பி, இருந்த இவர் ஐ படத்தின் மூலம் மீண்டும் வெற்றி கொடி நாட்டினார். இப்படத்தின் வெற்றி இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்படத்தில் இவரின் நடிப்பு நடிகர் விஜய்யை கவர தன் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
எமிக்கு இந்த பிறந்த நாள் ரொம்பவே ஸ்பெஷல் தான், அவர் தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோயினாக வலம் வரவேண்டும் என சினி உலகம் வாழ்த்துக்களை சொல்வது மட்டுமின்றி, பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top