↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தல அஜீத் ரசிகர்கள் டுவிட்டர் என்ற சமூக வலைத்தளத்தை பல மாதங்களாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள் என்பது அறிந்ததே. அஜீத் குறித்த ஏதாவது ஒரு புதிய தகவல் வந்தால் உடனே அதை ஒரு ஹேஷ்டெக்காக மாற்றி இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கிவிடுவது அவரது ரசிகர்களின் வாடிக்கை.
இந்நிலையில் நேற்று அதிகாலை 'குட்டித்தல' பிறந்தவுடன் அஜீத்தை விட படுகுஷியான அவரது ரசிகர்கள் குட்டித்தல'க்கு ஒரு ஹேஷ்டாக் உருவாக்கி அதையும் இந்திய அளவில் உள்ள டிரெண்டில் முதலிடத்தில் கொண்டு வந்து சாதனை படைத்துவிட்டனர். பிறந்த முதல் நாளே குட்டித்தல' இந்திய அளவில் புகழ் பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குட்டித்தல'க்கு திரையுலக பிரமுகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தனுஷ்: அஜீத் சாருக்கும் ஷாலினி மேடம் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். கடவுளின் ஆசிர்வாதம் எப்பொழுதும் அவர்களுடைய குழந்தைக்கு இருக்கும்.
வெங்கட்பிரபு: வெல்கம் குட்டித்தல. அஜீத் சார் மற்றும் ஷாலினி மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஜெயம் ரவி: அஜீத் மற்றும் ஷாலினி மேடம் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கடவுள் உங்கள் குழந்தைக்கு ஆசிர்வதிப்பார்.
நயன்தாரா: அஜீத் சாருக்கும் அவருடைய குழந்தைக்கும் வாழ்த்துக்கள்
சிவகார்த்திகேயன்: வந்துவிட்டார் குட்டித்தலை. கங்கிராட்ஸ் அஜீத் சார் மற்றும் ஷாலினி மேடம்.
வைபவ் ரெட்டி: வாழ்த்துக்கள் அஜீத் அண்ணா. குட்டித்தல' குட்டிப்பையனுக்கும் வாழ்த்துக்கள்
விக்ரம் பிரபு: அஜீத் சார் குடும்பத்தினர்களுக்கும் குழந்தைக்கும் வாழ்த்துக்கள். புதிய சந்தோஷமான வாழ்க்கை தொடங்கட்டும்
மேலும் பிரசன்னா, நகுல், அஞ்சலி, இசையமைப்பாளர் டி.இமான், ஈராஸ் நிறுவனம் உள்ளிட்ட பலரும் அஜீத், ஷாலினி மற்றும் புதிதாக பிறந்த குழந்தைக்கும் ஆழ்த்து தெரிவித்துள்ளனர்.
Home
»
ajith
»
cinema
»
cinema.tamil
»
dhanush
»
jeyamravi
»
nayanthara
»
salini
»
sivakarthikeyan
»
venkat
»
vikrampirabu
» குட்டித்தல'க்கு வாழ்த்து தெரிவித்த பெருந்தலைகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment