↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

அதாரு அதாரு, டங்காமாரி பாடல்கள் வரிசையில் சமீபத்தில் சூப்பர் ஹிட் ஆன பாடல் ஜெயம் ரவி நடிக்கும் 'ரோமியோ ஜுலியட்' படத்தில் இடம்பெற்ற டண்டனக்கா' பாடல் என்றால் அது மிகையில்லை.  இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த பாடல் பலரது செல்போனின் காலர் டியூனாக மாறியுள்ள நிலையில் இந்த பாடலின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு ரசிகர்களுக்கும் படக்குழுவினர்களுக்கும் ஜெயம் ரவி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை தயாரிக்கவும், இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாகவும், தனது நீண்டநாள் கனவு வெகுவிரைவில் நிறைவேறவுள்ளதாகவும் அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அனேகன் படத்தில் இடம்பெற்ற 'டங்காமாரி' பாடலை எழுதிய ரோகேஷ் இந்த பாடலையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டி.இமானின் இசையமைப்பில் அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார்.

ரோமியோ ஜூலியட்' படத்தில் ஜெயம் ரவியுடன் ஹன்சிகா, பூனம் பாஜ்வா, விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தை லக்ஷ்மண் இயக்கி வருகிறார். இந்த படம் வெகுவிரைவில் ரிலீஸாகவுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top