↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஏ ஆர் முருகதாஸ்
ஒரு சில படங்களாக இருந்தாலும், குறிப்பிடும்படியான பெயரை பதிவு செய்த இயக்குநர்களுள் ஒருவரான ஏ ஆர் முருகதாஸ், தற்போதைய சில ஆண்டுகளில் பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். அவற்றுள் ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் முக்கியமானவை.
இருப்பினும் இவர் தனது காலடித் தடத்தினை பாலிவுட்டில் காட்ட வேண்டும் என்று எண்ணி தனது படங்களில் ஒன்றான கஜினியினை முதலில் இறக்கிப் பார்த்து வெற்றியும் கண்டார். அதேபோல்தான் துப்பாக்கியினையும் ஹிந்தியில் கொடுத்து கல்லாவை ஃபுல்லாக்கினார்.

அடுத்த படம்

தமிழில் தொடர் வெற்றிகளைக் கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் அடுத்து ஹிந்தியில் படம் பண்ணப் போவதாக பலர் கூறினர். அதேபோல் தமிழில் மௌனகுரு என்ற பெயரில் வெளிவந்த படத்தினை ஹிந்தியில் ஏ ஆர் முருகதாஸ் பண்ணப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் வந்த கதையினை கொஞ்சம் மாற்றி அமைக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.
மௌனகுரு படத்தினை தமிழில் அருள்நிதி மற்றும் இனியா இணைந்து நடித்தனர். உமா ரியாஸ் போலீஸ் வேடத்தில் நடித்தார், அத்துடன் படம் முழுவதும் த்ரில்லாக செல்லும். எனவே ஹிந்தியில் ரசிகர்கள் இதை விரும்புவார்கள் என அவர் நம்புகிறார். இவரின் இந்த படத்திலும் அனிருத் மியூசிக்தான் இருக்கும் என்கிறார்கள். விரைவில் இப்படம் தொடங்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய், அஜீத் மற்றும் விக்ரம்

ஏ ஆர் முருகதாஸ் விஜய், அஜீத் அல்லது விக்ரமை வைத்து தமிழில் ஏதாவது படம் இயக்குவார் என்று பல தமிழ் ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது. விஜய், அஜீத் மற்றும் ஆகிய மூவருமே சரியான ஃபார்மில் இருப்பதால் இவர்களில் யாரை வைத்து எடுத்தாலும் படம் நல்லா ஓடும் என தயாரிப்பாளர்களும் எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top