ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. |
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதனையடுத்து, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் தங்களையும் 3வது பார்ட்டியாக சேர்க்க வேண்டும் , என தி.மு.க., தரப்பில் அன்பழகனும், சுப்பிரமணியசுவாமியும் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு்கள் மீதான விசாரணை சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி , திமுக மனுவை தள்ளுபடி செய்தார். அதே நேரத்தில் சுப்பிரமணியசாமிக்கு நீதிமன்றம் சில வழிகாட்டி நெறிமுறைகளை தெரிவித்துள்ளது. இதன்படி சாமி அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிற்கு தேவையான உதவிகள் செய்யலாம். அவரது தரப்பு விடயங்களை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம். ஆனால் வழக்கில் ஆஜராகி வாதிட அனுமதி இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார். |
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: சாமிக்கு சாதகமான தீர்ப்பு
↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
0 comments:
Post a Comment