↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ajith, arun vijayஅஜித் நடிப்பில் நாளை மறுநாள் (பிப்5) ரிலீஸாகவிருக்கும் படம் என்னை அறிந்தால். கௌதம் மேனன் இயக்கத்தில் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

என்னை அறிந்தால் படத்தின் அனுபவம் பற்றி அருண் விஜய் கூறியதாவது, ‘என்னை அறிந்தால்’ படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இது ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். என்னையே வேற மாதிரி பார்க்கக்கூடிய கதாபாத்திரம். படம் முடிந்தும் இந்த கேரக்டரில் இருந்து வெளிவர 1 மாதங்கள் ஆனது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய பெருமை. அவர் ரொம்பவும் ஜாலியான நபர். இந்த படத்தில் அஜித் நடித்துள்ள சத்யதேவ் கதாபாத்திரம், அவருடைய உண்மையான கதாபாத்திரத்தை பிரதிபலிப்பதாக இருக்கும். அஜித் எப்போதும் எல்லோரையும் உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார் என்றார்.
அதோடு தன்மீது நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தில் தன்னை நடிக்க வைத்ததற்காக இயக்குனர் கௌதம் மேனனுக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top