அண்மையில் ஒரு முன்னணி இணையதளத்தில் ஒரு செய்தி வந்தது. சுந்தர்சி படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. அடுத்தடுத்த சில நிமிடங்களுக்குள் சம்பந்தப்பட்ட இணையதளத்திற்கு சிவாவின் மேனேஜர் போன் அடித்தாராம்.
‘சார்... அப்படியெல்லாம் ஒரு பேச்சு வார்த்தை நடக்கவேயில்ல. உடனே அந்த செய்தியை நீக்குங்க’ என்று. அப்படியென்றால் நடப்பதுதான் என்ன? இப்படியெல்லாம் தானாக செய்தியை கிளப்பிவிடுவதே சு.சி வட்டாரம்தானாம். இப்படியே செய்தி பரவினால், அதையே முன் குறிப்பாக வைத்து ‘எப்படியெல்லாம் எழுதுறாங்க பாருங்க? அதுக்காகவாவது நாம சேர்ந்து ஒரு படம் பண்ணிடுவோமே!’ என்று பேச்சு வார்த்தையை துவங்கும் திட்டம்தான் இது என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில்.
0 comments:
Post a Comment