↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
தமிழ் படங்கள் பிடிக்காமல் இந்தியில் நடிக்கச் சென்ற வித்யா பாலன் குண்டாக இருப்பதாக கிண்டல் செய்தனர். அதை காதில் வாங்காமல் இருந்தவருக்கு திடீரென்று ஸ்லிம் தோற்றத்திற்கு மாற ஆசை ஏற்பட்டது. அதற்காக கடுமையாக உழைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,‘குழந்தையிலேயே நான் கொழுகொழுவென்றுதான் இருப்பேன். பெரிய கண்கள், நீண்ட கூந்தல் கொண்ட அழகான பெண் என்று என்னை நினைத்திருந்தேன். கல்லூரிக்கு சென்றபோது என்னை தோழிகள் நக்கலடிக்கத் தொடங்கினர். இதற்காக தினமும் 10 லிட்டர் தண்ணீர் குடித்து உடலை மெலிதாக ஆக்க முயன்றேன். சினிமாவுக்கு வந்தபிறகு எனது உணவு கட்டுப்பாடு பராமரிப்பாளரின் ஆலோசனைப்படி உடல் மெலிவதற்கான மாத்திரைகள் சாப்பிட்டேன்.
அதற்கேற்ப மெலிந்தேன். திடீரென்று மாத்திரைகளை நிறுத்தியதால் டபுள் மடங்கு குண்டாகிவிட்டேன். பயந்துபோய் டாக்டரிடம் சென்றேன். நான் ஆரோக்கியமாக இருப்பதாக கூறினார்கள். தற்போது சரியான பயிற்சி, உணவுகட்டுப்பாடு மூலம் எடையை குறைத்துள்ளேன்' என்றார். ஸ்லிம் தோற்றத்துடன் சமீபத்தில் மும்பையில் நடந்த விருது விழா ஒன்றில் பங்கேற்றார். அவர் உடல் எடை குறைத்திருப்பதை பல ஹீரோயின்கள் பாராட்டியபோதும் யாருக்கும் நன்றி சொல்லவில்லை. காரணம், அவர் குண்டாக இருந்தபோது கிண்டல் செய்தவர்களை தோழிகள் பட்டியலிலிருந்து ஒதுக்கிவிட்டது தானாம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.