↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் அப்படி என்ன தான் சொல்லிருக்காங்க இந்த படத்துல என்று பார்க்க துடிக்கும் விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம், எங்க தல தொடர்ந்து இரண்டு படத்தை ஹிட் கொடுத்து இருக்காரு இந்த படத்தையும் ஹிட் கொடுப்பார் என்று ஆவலோடு துடித்துக்கொண்டிருக்கும் அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் இருக்க, பொதுவான ரசிகர்கள் ஏன் பார்க்க வேண்டும். இதோ அதற்கான சில காரணங்கள்….
* கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க மற்றும் வேட்டையாடு விளையாடு என்ற இரண்டு காவல்துறை சம்பந்தப்பட்ட படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் இந்த படமும் கட்டாயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் பார்க்கலாம்.
* ஹாரிஸ் ஜெயராஜ், கௌதம்மேனன் கூட்டணியில் இதற்கு முன்பு வந்த அனைத்து படங்களின் பாடல்களும், பின்னனி இசையும் சூப்பர் ஹிட் ஆனது அதே போல் இந்த படத்திலும் அதை எதிர்பார்க்கலாம்.
* தேசிய விருது பெற்ற தியாகராஜன் குமாரராஜா மற்றும் ஸ்ரீதர் ராகவனுடன் இணைந்து கௌதம் மேனன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பதாலும், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த டான் மெக்கர்தூரின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் முக்கிய பங்கு.
* அனுஷ்கா, த்ரிஷா, விவேக் என பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருப்பதாலும், அருண்விஜய் சிக்ஸ் பேக்ஸுடன் மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
* இறுதியாக என்னை அறிந்தால் படத்தின் டீஸர் மற்றும் டிரைலருக்கு இதுவரை எந்த தமிழ் சினிமாவிற்கும் கிடைக்காத வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏந்திக்கொண்டு வெளிவரும் இந்த ஏவுகனை எந்த வித கோளாறும் இன்றி விண்ணை நோக்கி பறக்குமா…இல்லையா….என்பதை இரண்டு தினங்களில் பார்கலாம்.
வியாழக்கிழமை காலை 9 மணிக்கு என்னை அறிந்தால் படத்தின் திரைவிமர்சனம் வெளியிடப்படும்.

1 comments:

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top