↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
நடிகர் நடிகைகள் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து விட்டால், அதன்பிறகு அவர்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும். முக்கியமாக படப்பிடிப்பு
தளங்களில் ஸ்டார் ஹோட்டல் உணவுகள்தான் அவர்களுக்கு கொடுக்கப்படும். அதேபோல், நினைத்த ஜூஸ் வகைகளை சாப்பிடலாம். அவர்கள் சொடக் போட்டாலே தேவையை நிறைவேற்ற உதவியாளர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். ஆனபோதும், அவர்களால் விரும்பியதை சாப்பிடத்தான் முடியாது. உடம்பை கன்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும் என்று தங்களது விருப்ப உணவுகள் அனைத்தையுமே ஓரங்கட்டி விடுவார்கள். அந்த வகையில், அரை வயிறும் கால் வயிறுமாகத்தான் டயட்ஸ் கடைபிடிப்பார்கள். ஆனால் இந்த விசயத்தில் அஞ்சலி வித்தியாசமானவர். டைரக்டர்கள் எடையை குறைக்க சொன்னால் அந்த காலகட்டத்தில் மட்டுமே டயட்ஸ் மட்டுமின்றி கடின உடற்பயிற்சிகள் செய்து உடம்பை குறைப்பார். ஆனால், அவர்களது படத்தை முடித்ததும், தனது பேவரிட் அயிட்டங்களை புல் கட்டு கட்டத் தொடங்கி விடுவாராம். அதிலும் பிரியாணி என்றால் அவருக்கு கொள்ளை பிரியமாம். 3 மாதங்கள் அதை தவிர்த்தால் அடுத்து 3 மாதங்களுக்கு புகுந்து விளையாடி விடுவாராம்.
அந்த வகையில், ரீ-என்ட்ரியில் தமிழுககு வந்த அவர், ஸ்லிம்மாகத்தான் இருநதார். ஆனால் இப்போது மறுபடியும் அவரது உடம்பு ஒரு சுற்று பெருத்து விட்டது. இதெல்லாம் பிரியாணி பார்த்த பார்வைதானாம். அதனால் சில டைரக்டர்கள் ஒரே படத்தில் முதலில் ஒரு மாதிரியாகவும் பிற்பாதியில் இன்னொரு மாதிரியாவும் அஞ்சலி இருப்பார் என்பதால், அவருக்கு இந்த மாதிரி உணவுகளை மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்று கூறி வருகிறர்கள. முக்கியமாக பிரியாணியை அவர் கண்ணிலேயே காட்டக்கூடாது என்று அவரது உதவியாளர்களிடம் கண்டிசன் போடுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment