
ஷமிதாப்' இந்தி படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆகிறார் கமலின் இளைய மகள் அக்ஷரா. இதில் அவருக்கு ஜோடி தனுஷ். தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களுடன் நட்புடன் பழகி, அவர்களுக்கு வசன உச்சரிப்பு, காட்சிகளை விளக்கி நடிக்க வைப்பது உள்ளிட்ட உதவிகளை தனுஷ் செய்வார். 'அனேகன்' படத்தில் நடித்தபோது இதேபோல் புதுமுகம் அமைராவுக்கு நிறைய விஷயங்களை கற்று தந்தாராம் தனுஷ். அதே மாதிரி புதுமுகமான அக்ஷராவுக்கும் நடிப்பு சம்பந்தமாக ஏதாவது உதவிகளை செய்திருப்பார் என அவரிடம் கேட்டால், இல்லை என மறுக்கிறார்.'ஷமிதாப் படத்தில் புதுமுகமாக அறிமுகமான அக்ஷராவுக்கும், எனக்கும் வித்தியாசம் இல்லை. காரணம், இந்தியில் நானும் புதுமுகம் போலத்தான். அங்கு எனது ஒரு படம்தான் வெளியாகியுள்ளது. என்னுடைய வேடத்துக்கு நான் நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டி இருந்தது. முதல் படம் என்பதால் அக்ஷராவுக்கும் அந்தநிலைதான். இந்தநிலையில் அக்ஷராவுக்கு டிப்ஸ் கொடுக்க எனக்கு நேரம் இல்லை' என்றார் தனுஷ்.
0 comments:
Post a Comment