↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கின்றார் என்பது தெரிந்ததே. ஏற்கனவே ஹன்சிகா வேலாயுதம் படத்தில் நடித்துள்ளதால் விஜய்க்கு அவர் அறிமுகமானவர்தான். எனவே ஹன்சிகாவை அவர் படப்பிடிப்பு தளத்தில் 'ஹன்ஸ்' என்றுதான் செல்லமாக அழைப்பாராம். 

ஆனால் புலி' படத்தில் ஹன்சிகா, இளவரசி வேடத்தில் நடிப்பதால் தற்போது விஜய், ஹன்சிகாவை 'ஹன்ஸ்' என்பதற்கு பதிலாக 'பிரின்ஸ்' என்றே அழைக்கின்றார் என கூறப்படுகிறது.

விஜய் பிரின்ஸ் என்று அழைப்பதை பார்த்து "புலி" படக்குழுவினர்களும் ஹன்சிகாவை பிரின்ஸ் என்ரே அழைக்கின்றனர். ஹன்சிகா உண்மையிலேயே அழகு என்பதால் அவர் அந்த பட்டத்திற்கு பொருத்தமானவர்தான் என்று படக்குழுவினர் அவர் முன்பே கூறி வருவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

விஜய் - சிம்புதேவன் முதன்முதலில் இணையும் 'புலி' படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் நடித்த பத்ரி, வில்லு ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பி.டி.செல்வகுமார் தயாரித்து வரும் இந்த படம் வரும் மே மாதம் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top