ஒவ்வொரு போட்டி தொடர் முடிவிலும் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு வருகிறது.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி முடிந்ததும் வெளியிடப்பட்ட தர வரிசையில், முத்தரப்பு போட்டியில் தோல்வியை சந்திக்காமல் சம்பியன் பட்டம் வென்ற அவுஸ்திரேலிய அணி (120 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
உலகக்கிண்ண போட்டியில் அவுஸ்திரேலிய அணி முன்னணி அணியாக களம் காணுகிறது.
இந்திய அணி (114 புள்ளிகள்) 2வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா (113 புள்ளிகள்) 3வது இடத்திலும், இலங்கை அணி (109 புள்ளிகள்) 4வது இடத்திலும், இங்கிலாந்து அணி (104 புள்ளிகள்) 5வது இடத்திலும், நியூசிலாந்து அணி (101 புள்ளிகள்) 6வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (96 புள்ளிகள்) 7வது இடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணி (94 புள்ளிகள்) 8வது இடத்திலும், வங்கதேச அணி (75 புள்ளிகள்) 9வது இடத்திலும், ஜிம்பாப்வே அணி (53 புள்ளிகள்) 10வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் (41 புள்ளிகள்) 11வது இடத்திலும், அயர்லாந்து அணி (34 புள்ளிகள்) 12வது இடத்திலும் இருக்கின்றன.
துடுப்பாட்ட தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் (891 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் ஹாசிம் அம்லா (867 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 2வது இடம் பிடித்துள்ளார்.
முத்தரப்பு தொடரில் ஜொலிக்காத இந்திய வீரர் விராட் கோஹ்லி (831 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 3வது இடத்தில் இருக்கிறார். சங்கக்கரா (இலங்கை) 4வது இடத்தையும், டில்ஷான் (இலங்கை) 5வது இடத்தையும், கனே வில்லியம்சன் (நியூசிலாந்து) 6வது இடத்தையும், ஷிகர் தவான் (இந்தியா) 7வது இடத்தையும், டோனி (இந்தியா) 8வது இடத்தையும், குயின்டன் டீ காக் (தென் ஆப்பிரிக்கா) 9வது இடத்தையும், ஜார்ஜ் பெய்லி (அவுஸ்திரேலியா) 10வது இடத்தையும், ரோஹித் சர்மா (இந்தியா) 13வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பந்து வீச்சு தர வரிசையில் பந்து வீச்சு சர்ச்சையில் சிக்கி உலகக்கிண்ண அணியில் இடம் பிடிக்காத பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் முதலிடத்திலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் 2வது இடத்திலும் தொடருகின்றனர்.
தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் 3வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4வது இடத்திலும், அவுஸ்திரேலிய வீரர் ஜான்சன் 5வது இடத்திலும் உள்ளனர்.
0 comments:
Post a Comment