↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அந்த வீடியோவை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்ட 5 வாலிபர்களை பிடிக்க உதவி செய்யுங்கள் என்று பெண்கள் உரிமை ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத்தில் என்.ஜி.ஓ. ஒன்றை நடத்தி வருபவர் பெண்கள் உரிமை ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன். அவருக்கு 15 வயது இருக்கையில் அவரை 8 பேர் பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன் பிறகு அவர் பெண்கள் உரிமைக்காக போராடி வருகிறார். ஹைதராபாத்தில் வசிக்கும் அவரின் கணவர் ஒரு திரைப்பட இயக்குனர். அண்மையில் அவரது வாட்ஸ்ஆப்புக்கு 2 வீடியோக்கள் வந்துள்ளது.
அந்த வீடியோக்களில் பெண் ஒருவரை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கேமராவுக்கு சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர். 6 மாதங்களுக்கு முன்பு அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து சுனிதா கூறுகையில்,
வீடியோவை பத்து நொடிகள் பார்த்த உடன் அதை நிறுத்துவிட்டு போய் வாந்தி எடுத்தேன். என் கணவர் உதவியுடன் வீடியோவில் உள்ள பெண்ணின் அடையாளத்தை வெளிவராமல் அதை எடிட் செய்தேன். அந்த கயவர்களின் முகம் நன்கு தெரியும் வகையில் வீடியோ எடிட் செய்யப்பட்டது என்றார். இது போன்ற வீடியோக்கள் யாருக்காவது வந்தால் sunitha_2002@yahoo.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு சுனிதா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சுனிதா எடிட் செய்யப்பட்ட வீடியோவை நேற்று யூடியூப்பில் வெளியிட்டார். அந்த கயவர்களை தெரிந்தால் அடையாளம் காட்டுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளை சந்தித்து அந்த 5 பேரையும் கண்டுபிடித்து தண்டிக்க உதவுமாறு வலியுறுத்த உள்ளார் சுனிதா. இதற்கிடையே மர்ம நபர்கள் சுனிதாவின் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Home
»
news
»
news.india
»
rape
» பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து அந்த வீடியோவை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்ட 5 வாலிபர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment