↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
களரியாட்டத்துடன் துவங்கும் உத்தம வில்லன்
கமல்ஹாசனின் எழுத்து, கதை மற்றும் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படமான உத்தம வில்லனின் ஆடியோ வெளியீடு அடுத்த மாதம் (மார்ச்) முதல் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அனைத்து வேலைகளையும் விறுவிறுப்பாக செய்து வரும் படக்குழுவினர், சென்னையில் உள்ள டிரேட் சென்டரை இதற்காக தயார்படுத்தி வருகின்றனர்.

களரியாட்டத்துடன் துவங்கும் உத்தம வில்லன்

இந்நிகழ்ச்சியில் பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் ஒரு நிகழ்ச்சிக்கு பெங்களூரைச் சேர்ந்த ஆட்டக்களரி எனும் களரியாட்டக் குழுவினரை ஏற்பாடு செய்துள்ளனர். ஏற்கனவே உத்தம வில்லன் படத்தில் கமல் கேராளவின் தைய்யம் எனும் ஆட்டத்தினை ஆடுவதுபோல் காட்டப்பட்டுள்ளதால், அதனுடன் தொடர்புடைய மற்றொரு கலையான களரியாட்டத்தினை மேடையில் நடத்தப்போவது மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
களரியாட்டத்துடன் துவங்கும் உத்தம வில்லன் சிறந்த ஹிட் கொடுக்கும் எனவும் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உத்தம வில்லன் படம் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top