↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
திரிஷா திருமணத்தையடுத்து அனுஷ்கா, ஸ்ரேயா, காஜல் அகர்வால் திருமணம் எப்போது என்று கோலிவுட்டில் பேச்சாக உள்ளது. திருமணத்துக்கு பிறகு ஹீரோயின்கள் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு குடும்பத்தில் ஐக்கியமாகி விடுகின்றனர்.
காஜல் அகர்வால் இதிலிருந்து மாறுபடுகிறார். திருமணத்துக்கு பிறகும் நடிக்க அவர் முடிவு செய்திருக்கிறார்.இதுபற்றி அவர் கூறும்போது, ‘ஹீரோ அல்லது ஹீரோயின் இருவருமே ஒரே பணியில்தான் இருக்கின்றனர்.
திருமணம் ஆனபிறகும் ஹீரோக்கள் தொடர்ந்து நடிக்கிறார்கள். அதுபோல் ஹீரோயினும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதில் என்ன தவறு? திருமணத்துக்கு பிறகு முழுக்கு போடுவீர்களா என ஹீரோக்களை ஏன் யாரும் கேட்பதில்லை. ஹீரோக்களும் ஏன் அப்படி முழுக்கு போடுவதில்லை' என்றார்.
‘திருமணம் எப்போது, திருமணத்துக்கு பிறகு நடிப்பீர்களா?‘ என்று சமீபகாலமாக அவரை சந்திக்கும் மீடியாக்காரர்கள் கேட்கிறார்களாம். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இப்படியொரு பதிலை அவர் அளித்தாராம். இதன் மூலம் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிப்பதை காஜல் உறுதி செய்திருக்கிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment