↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
சிம்பு தேவன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் புலி. இப்படத்தில் படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு இளமை துள்ளும் ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு மூன்று வேடங்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் நடனக்காட்சி எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இதில் 150 நடனக்கலைஞர்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் விஜய் புதிய கெட்டப்பில் தோன்றுவதால் மிகவும் ரகசியமாக எடுக்கப்பட்டு வருகிறதாம். மேலும், இதற்கு மாஸ்டர் ராஜசுந்தரம் தான் நடனம் அமைக்கிறாராம். புலி படத்தின் படப்பிடிப்பு பற்றி பல செய்திகள் வருவதை பார்த்துவிட்டு ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது புலி படத்தில் விஜய் பார்க்க எப்படி இருப்பார் என்பது தான் அந்த எதிர்பார்ப்பு.

இந்நிலையில் தான் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதம் வெளிவரும் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தது. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து தற்போது ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இதில் பர்ஸ்ட் லுக் பற்றி நாங்கள் இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை, தற்போது படவேலைகள் பிஸியாக இருப்பதால் பர்ஸ்ட் லுக் பற்றி யோசிக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top