↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
அட்டக்கத்தி படத்தில் நடித்த நந்திதா அநத படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்ததால் அதன்பிறகு அவரை அந்த மாதிரி வேடங்களிலேயே அதிகமாக
நடிகக வைத்தனர். அந்த கெட்டப் அவருக்கு கச்சிதமாக பொருந்தியதால் அவர் கிராமத்து பெண்தானோ என்று நினைக்கும் வகையில் அவரது நடிப்பும் இருந்தது. ஆனால் அவரோ நிஜத்தில் ரொம்ப மாடர்னான பெண்ணாம். தான் பெங்களூரில் இருந்தபோது எப்போதுமே மாடர்ன் கெட்டப்பில்தான் இருப்பாராம். நிஜ வாழ்க்கையில் அவர் படங்களில நடிப்பது போன்ற காஸ்டியூம்களை அணிந்து கொண்டதே இல்லை. அந்த வகையில் சினிமா மூலம்தான் வில்லேஜ் பெண்ணாக நான் வாழ்ந்திருக்கிறேன் என்கிறார் நந்திதா. அதேபோல் இப்போது லட்சுமிமேனனும் அவரை போன்றே கூறியுள்ளார். அதாவது கும்கி படத்தில் இருந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என பக்கா கிராமத்து பெண்ணாக நடித்திருந்தபோதிலும், நிஜத்தில் அவர் மாடர்னான பெண்ணாம். வீட்டிலும் சரி, வெளியில் செல்லும்போதும் சரி ஜீன்ஸ், டீசர்ட் போன்ற உடைகளைத்தான் அதிகமாக விரும்பி அணிவாராம்.அந்த வகையில், சினிமாவில் சிப்பாய் படத்தில் மட்டும்தான் அவரது நிஜ கெட்டப்பில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால் அந்த படம் இன்னமும் கிடப்பில் கிடக்கிறது. ஆக, எனக்கு சினிமாவில் ரியல் கெட்டப் ஒர்க்அவுட் ஆகவில்லை என்கிறார் லட்சுமிமேனன்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment