ஏ.ஆர்.ரகுமான் புகழ் ஏறகனவே கடல் கடந்து சென்று விட்டது என்றே கூறலாம். அந்த வகையில் தற்போது இவர் முதன் முறையாக ஒரு ஈரானிய படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இப்படத்தின் இயக்குனர் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’ என்ற தரமான படத்தை எடுத்தம் மஜித் மஜிதி தான். இப்படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அங்கேயே தங்கிவிட்டாராம்.
மேலும், இதில் உலக புகழ் பெற்ற பாலஸ்தீன இசை குழுவினரான லி ட்ரையோ ஜோப்ரானுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து பணியாற்றி வருகிறார். லி ட்ரையோ ஜோப்ரான் குழுவின் சகோதர்களான சமீர், விஷ்ஷம், அட்னன் ஜோப்ரான் ஆகியோர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து விறுவிறுப்பாக இசையமைத்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment