↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

எந்திரன் 2

எந்திரன்

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்திய திரைப்படங்களை ஒட்டுமொத்தமாக திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் எந்திரன். தான் எடுத்துள்ள படங்கள் மொத்தமே இரண்டுதான் ஒன்று எந்திரன் மற்றொன்று ஐ என்று ஷங்கர் கூறுமளவிற்கு, எந்திரன் படத்தின் ஒவ்வொரு சீனிலும் அதிகமாக வேலை செய்துள்ளனர் படக்குழுவினர். முதலில் கமலின் கைக்கு சென்ற எந்திரன் பின்பு ரஜினிக்கு வந்தது. ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடித்து ஏ ஆர் ரஹ்மன் இசையில் உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை ஆர்வமுடன் பார்க்க வைத்த எந்திரன், படக்குழுவினரின் கல்லா பையினை பணத்தினால் நிரப்பியது. வசூல் வேட்டை நடத்தி எக்கச்சக்க சாதனைகளை முறியடித்தது.

எந்திரன் 2

படம் முடிந்த சில மாதங்களுக்குள் ஷங்கர் அடுத்த பாகமான எந்திரன் 2 கண்டிப்பாக எந்திரன் எடுப்பேன் என்று கூறியிருந்தார். அதனை இப்போது செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது. 2010 இல் வெளிவந்த எந்திரனின் தொடர் பாகமாக இருக்கப்போகும் இந்த எந்திரன் 2 இல் அமீர்கான் நடிக்கலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. எந்திரன் 2 க்கான கதையினை ரெடி செய்துவிட்டார் ஷங்கர். ஆனால் படத்தில் அமீர் கான் மட்டும் இருந்தால் படம் எப்படியிருக்கும் என்று பலர் யோசித்து வந்த நிலையில் ஷங்கர் மற்றும் ரஜினி இருவரும் திடீர் சந்திப்பு ஒன்றினை நடத்தினார்கள்.

சந்திப்பின் முடிவில் எந்திரன் 2 இல் ரஜினியும் அமீர் கானும் நடிப்பார்கள் என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

வெற்றிக்கான அடித்தளம்

எந்திரன் 2 இல் அமீர் கானை இணைப்பதன் மூலம் நேரடியாக ஹிந்தியிலும் ஹிட் கொடுக்க முடியும் என்ற யுத்தியினை படக்குழுவினர் கையாளலாம என்று தெரிகிறது. தமிழுக்கு ரஜினி, ஹிந்திக்கு அமீர் கான் என இருபக்கமும் நல்ல வரவேற்பு இருக்கும். பட்ஜெட் கண்டிப்பாக பெரிசாத்தான் இருக்கும் என்பதால் அடுத்த தரமான படமாக எந்திரன் 2 இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top