↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
மீண்டும் \'காமெடி\' பாணிக்கு திரும்பிய வடிவேலு! - Cineulagam


தமிழ் சினிமாவில் சமீபகாலகட்டத்தில் நல்ல கதைகளுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ, அனைவரையும் கவர்ந்திழுக்கும் அளவுக்கு ஒரு தலைப்பிற்கு கண்டிப்பாக பஞ்சம் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.
விலங்குகளின் பெயர்களை தலைப்பாக வைப்பது இப்போது ஒரு ட்ரெண்ட்டாகவே மாறிவிட்டது போல. சிங்கம், சுறா, புலி, சிறுத்தை, என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
வெகு நாட்களாக சினிமாபக்கமே வராத வடிவேலு, சென்ற வருடம் 'தெனாலிராமன்' படத்தின் மூலம் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அந்த படம் ஆட்டம் கண்டதால், அடுத்து அவரை வைத்து படம் தயாரிக்க யாரும் முன்வராததால் சற்று ஒதுங்கியே இருந்தார்.
இப்போது அவர் மீண்டும் 'தெனாலிராமன்' இயக்குனர் யுவராஜ் கூட்டணியில் 'எலி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அவர் மீண்டும் அனைவரையும் சிரிக்க வைக்கும் அளவுக்கு ஒரு காமெடியான தோற்றத்திற்கு திரும்பியுள்ளது தெளிவாக தெரிகிறது.
சமீபத்தில் தான் இளையதளபதி விஜய்'யின் அடுத்த படத்திற்கு 'புலி' என தலைப்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top