ஆனந்த்விஜய் சேதுபதி, நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ள படம் நானும் ரௌடிதான். இந்த படத்திற்காக நயன்தாரா தெருக்கடைக்கு சென்று சரக்கு வாங்குவது போன்ற காட்சி இடம்பெறுகிறது.
நயன்தாரா பீர் வாங்கும் காட்சியில் நடிப்பது பெண்களை குடிக்க தூண்டுவது போல் உள்ளது. எனவே அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி இந்து மக்கள் கட்சி போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் இதனால் நயன்தாராவின் உருவ பொம்மையை எரித்தனர். அதோடு நயன்தாரா கழுத்தில் பீர் பாட்டில்களை மாலையாக அணிந்து இருப்பது போன்ற போஸ்டர்களும் ஒட்டினர். இந்நிலையில் நயன்தாராவுக்கு ஆதரவாக ப்ரியா ஆனந்த் கூறியதாவது:–
நயன்தாரா மதுக்கடையில் பீர் வாங்குவது சினிமாவுக்காக படமாக்கப்பட்ட காட்சி. இதற்கு எதிர்ப்புகள் கிளம்புவது துரதிர்ஷ்டவசமானது. படம் வெளியாவது வரை காத்து இருக்க வேண்டும். ரிலீசுக்கு முன்பே போராட்டங்கள் நடத்துவது ஏற்புடையவது அல்ல.
நாங்கள் நடிகைகள். சினிமாவில் பணத்துக்காக நடிக்கிறோம். ஒரு பெண் புகைப்பிடிப்பது போல் படத்தில் காட்சி இருக்கும். இதற்காக நிஜத்தில் அவர் புகைப்பிடிக்கிறார் என்று அர்த்தம் அல்ல. கதைக்கு தேவையாக இருக்கும் பட்சத்தில் அது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கிறது என்றார்.
தமிழ்நாட்டில் நயன்தாராவிற்கு குறிப்பிட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மீது அக்கறை காட்டாமல் டாஸ்மாக் காட்சியில் நடித்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது…
0 comments:
Post a Comment