↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் கௌதம் மேனன். ஆனால் கடந்த சில வருடத்தில் இவரின் படங்கள் தோல்வியை சந்தித்ததால் வாய்ப்புகளின்றி இருந்தார். அந்த சமயத்தில் அஜித் கொடுத்த வாய்ப்பு தான், என்னை அறிந்தால். என்னை அறிந்தால் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு கண்டு மகிழ்ச்சியாக உள்ளாராம், கெளதம் மேனன்.

இதுகுறித்து கெளதம் மேனன் கூறியவை: எனக்கும் அஜித்துக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை, இப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார், படத்தின் வரவேற்பை காணும் போது சந்தோஷமாக உள்ளது என்றார். மேலும், இப்படம் பெரிய வெற்றி பெற்றால் இரண்டாம் பாகம் இயக்கும் எண்ணமும் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அப்படி இரண்டாம் பாகம் எடுத்தால் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் தந்தையை கொன்ற டேனியல் பாலாஜியை குறி வைத்து கதை நகருமோ, என்ன தல ரசிகர்களே இரண்டாம் பாகத்துக்கு ரெடியா

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top