↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
என்னை அறிந்தால் படத்தின் நீளத்தை குறைத்ததற்கு இது தான் காரணம்! கௌதம் - Cineulagam
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நாளை என்னை அறிந்தால் ரிலிஸாகவுள்ளது. இந்நிலையில் கௌதம் படம் குறித்து பல தகவல்களை கூறியுள்ளார்.
இதில் படத்தில் அஜித் பறந்து பறந்து அடிக்கும் படி எந்த சண்டைக்காட்சிகளும் இல்லையாம், மேலும், அஜித்தே அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்து விட்டாராம்.
இப்படம் முதலில் சென்ஸார் சென்ற போது 3 மணி நேரத்திற்கு மேல் தான் இருந்தது. பின் மீண்டும் ஒரு சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருந்தது. அதனால் நேரம் கருதி சில காட்சிகளை நீக்கினோம்.
இதனால் படம் தற்போது 2 மணி நேரம் 46 நிமிடம் ஓடும். இதில் முதல் மற்றும் இறுதி 3 நிமிடம் டைட்டில் வந்து விடும், அப்படி பார்த்தால் படத்தின் நீளம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் தான்.
ஆனால், ரத்னம் படம் வந்து சில நாட்கள் கழித்து கட் செய்த அந்த காட்சிகளையும் வெளியிட முயற்சி செய்து வருகிறோம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top