↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
யதார்த்த நடிகர் என்றால் அது தனுஷ் என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவில் மட்டுமே புகழ்பெற்று வந்த தனுஷ், இந்தியில் ராஞ்சனா படத்தின் மூலம் அறிமுகமானார். முதல்படமே அவருக்கு வெற்றி படமாக அமைய இந்தியிலும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது. இதனையடுத்து பால்கி இயக்கத்தில், தனது இரண்டாவது படமாக ஷமிதாப் என்ற படத்தில் அமிதாப், அக்ஷ்ராவுடன் நடித்துள்ளார். இப்படம் இன்று(பிப்.6ம் தேதி) ரிலீஸாகியுள்ளது.
ஏற்கனவே ஷமிதாப் படம் ரஜினியை பிரதிபலிப்பதாக செய்திகள் வந்த நிலையில் இப்போது அது உண்மையாகியுள்ளது. ஆமாம், சாதாரண கண்டக்டராக தனது வாழ்க்கையை தொடங்கி பின்னாளில் சூப்பர் ஸ்டார் ஆனார் நடிகர் ரஜினிகாந்த். அதேப்போல் ஷமிதாப் படத்தில், சிறுவயது முதலே நடிப்பில் ஆர்வம் கொண்ட ஷமிதாப் எனும் தனுஷ் பஸ்கண்டக்டராக இருந்து பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகராக உருவெடுக்கிறார். ஆனால் இந்தப்படத்தில் தனுஷால் வாய் பேசமுடியாது அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பவராக நடித்துள்ளார் அமிதாப்.
படத்தில் தனுஷின் நடிப்பு அவ்வளவு அருமையாக வந்துள்ளது. வாய் பேச முடியாமல், தான் சொல்ல வந்ததை நடிப்பிலே சொல்லியிருக்கிறார். அமிதாப், தன்வை விட மூத்த நடிகர் என்றாலும் அவருக்கு சரிசமாக, சில இடங்களில் அவரையே மிஞ்சும் அளவுக்கு நடித்துள்ளார் தனுஷ். முதல்படத்திலேயே தனுஷிற்கு இந்தி திரையுலகில் நல்ல பெயர் கிடைத்துள்ள நிலையில், இப்போது ஷமிதாப் படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment