↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இன்னும் இரண்டு தினங்களில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம். இப்போது என்னை அறிந்தால் படம் ஏன் பார்க்க வேண்டும் 10 காரணங்களை பார்போமா.

1. அஜித்:- தல என்று அனைவராலும் அழைக்கப்படும் அஜித். ஸ்டைலிஷ் மற்றும் கூல் நடிகர் என்று அனைவராலும் மதிக்கப்படுபவர். மங்காத்தா படத்திற்கு பிறகு போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அஜித்தை இளம் நாயகனாக அதாவது சால்ட் அண்ட் பெப்பர் லுக் இல்லாமல் ஒரு கதாபாத்திரத்தில் படத்தில் வருகிறார்.

2. கௌதம் மேனன் :- ஆக்‌ஷனாக இருந்தாலும், காதல் படமாக இருந்தாலும் அதை கௌதம் மேனனை தவிர யாராலும் அவ்வளவு அற்புதமாக தந்துவிட முடியாது. என்னை அறிந்தால் படத்தில் இரண்டும் இருப்பதால் கூடுதல் பலம். முதல் முறையாக அஜித்துடன் இணைந்திருக்கிறார் கௌதம் மேனன்.

3. த்ரிஷா :- மங்காத்தா என்ற மாபெரும் ஹிட்டுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்திருக்கிறார். மீண்டும் அதே வெற்றியை இந்த படத்திலும் எதிர்ப்பார்க்க முடியுமென்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

4. அனுஷ்கா :- கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் அனுஷ்காவை மிஞ்ச ஆளில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏதோ வந்தோம் 4 பாட்டுக்கு ஆடினோம் என்று இல்லாமல் கதையை நம்பி அதில் அவரது கதாபாத்திரத்திம் பேசும்படி இருக்க வேண்டும் என்று கதைகளை தேர்வு செய்பவர். முதல் முறையாக அஜித்துடன் இணைந்து நடித்திருக்கிறார்.

5. அருண் விஜய் - டேனியல் பாலாஜி :- முதல் முறையாக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அதுவும் தல அஜித்துக்கு வில்லனாக நடித்திருக்கிறார். இவரின் 6 பேக்ஸ் உடம்பை பார்க்கும்போதே தெரிகிறது இப்படத்தில் இவர் எந்தளவுக்கு கொடூரமான வில்லனாக இருப்பார் என்று. அது மட்டுமில்லாமல் வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக அனைவரையும் கவர்ந்த டேனியல் பாலாஜியும் இந்த படத்தில் கலக்கியிருக்கிறார்கள்

6. கதை :- தேசிய விருது பெற்ற தியாகராஜன் குமாரராஜா மற்றும் ஸ்ரீதர் ராகவனுடன் இணைந்து இப்படத்திற்கு கதை எழுதியிருகிகிறார்.

7. டான் மெக்கர்தூர் :- என்னை அறிந்தால் படத்தின் ஒளிப்பதிவாளர் டான் மெக்கர்தூர், ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர், இவரின் ஸ்டைலில் அஜித்தை எவ்வளவு அழகாகவும், ஆக்‌ஷன் காட்சிகளை எவ்வளவு அற்புதமாகவும் எடுத்திருப்பார்.

8. ஹாரிஸ் ஜெயராஜ் :- இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், இவர் இதுவரை கௌதம் மேனன் படங்களில் இணைந்தபோதும் அந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாகியுள்ளது என்னை அறிந்தால் படமும் அப்படித்தான். கிட்டத்தட்ட 7 வருட இடைவெளிக்குப்பிறகு இருவரும் இணைந்துள்ளார்கள். பின்னணியில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்து படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றிருப்பார்.

9. பாடலாசிரியர்கள் :- இயக்குநர் விக்னேஷ் சிவன், கவிஞர் தாமரை இருவரும் என்னை அறிந்தால் படத்துக்கு பாடல்கள் எழுதியுள்ளார்கள். இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதிய பாடல் ஏற்கனவே சூப்பர் ஹிட்டாகியுள்ளது அதன் வீடியோவை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். கவிஞர் தாமரை பற்றி சொல்லவே வேண்டாம் மொலோடி பாடல்களை தந்து மனதை வருடும் விதமாக பாடல் வரிகளை எழுதுவார்.

10. டிரெய்லர் மற்றும் டீசர் :- முதலில் என்னை அறிந்தால் படத்தின் டீசரை வெளியிட்டு அதில் அஜித் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்னு படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை கூட்டிவிட்டது. அடுத்து டிரெய்லர் வெளியாகி ஒரு புதுவிதமான பின்னணி இசையில் ஆக்‌ஷன் காட்சிகளோடு காதலையும் காட்டியிருந்தார்கள், வில்லன் அருண் விஜய் அட்டகாசமான காட்சிகளை காட்டி அசத்தியிருந்தார் கௌதம் மேனன்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top