↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்திய கிரிக்கெட் அணி தற்போது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இதுவரை விளையாடி மூன்று போட்டிகளிலும் அணியை வெற்றியுடன் அழைத்து சென்ற தோனிக்கு பாராட்டு மழை குவிந்து வரும் நிலையில் அவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சினிமாத்துறையில் வெற்றி மேல் வெற்றி பெற்று கொண்டிருக்கும் தல அஜீத்துக்கும் நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த இரு குழந்தைகள் குறித்து இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்  இன்று தனது சமூக வலைத்தளத்தில் கருத்து கூறியுள்ளார்.

'இந்த வருடம் மிகவும் அற்புதமான வருடம் என்றும் தல தோனியின் இளவரசியும், தல அஜீத்தின் இளவரசனும் பிறந்த இந்த வருடத்தை மிகவும் சிறப்பான வருடமாக கருதுவதாகவும் இருவருக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளத்தில் செய்தி வெளிவந்துள்ளது. 

ஆனால் இந்த செய்தி அஸ்வினின் அதிகாரபூர்வ சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்படவில்லை. அஸ்வின் தெரிவித்ததாக கூறப்படும் இந்த கருத்து அஸ்வின் பெயரில் தொடங்கப்பட்ட டூப்ளிகேட் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அஜீத் ரசிகர்கள் இந்த கருத்தை ஆர்வத்துடன் ரசித்து படித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top