வரும் 26ம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடக்கும் 2வது உலகக்கிண்ண அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, அவுஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.
இதைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் சிட்னி மைதானத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர். இதில் ஷாட் பிட்ச் பந்தில் தடுமாறும் ரெய்னா, டென்னிஸ் பந்தில் பிரத்யேக பயிற்சி எடுத்துக்கொண்டார்.
இதற்காக இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் ப்ளட்சர், ரெய்னாவுக்கு டென்னிஸ் பந்துகள் மூலம் ஷாட் பிட்ச் பந்துகளை வீசினார். அந்த பந்துகளை ரெய்னா புல் ஷாட்டுகளாக ஆடிக்கொண்டிருந்தார்.
ரெய்னாவின் உடம்பை குறிவைத்து எறிந்த பந்துகளில் சிலவற்றை அடித்தும், சில பந்துகளை தவறவும் விட்டார். ஒரு சில பந்துகள் எட்ஜ் ஆனது. முதல் 15 நிமிடங்கள் பிளெட்சர் ரெய்னாவுக்கு பந்து வீசினார்.
பின்னர் இந்திய அணித்தலைவர் டோனியும் ரெய்னாவுக்கு உதவினார். டோனியின் வேகமான சர்வீஸ்களை சமாளிக்க முடியாமல் ரெய்னா தடுமாறினார். இதனால் ரெய்னாவை அழைத்த டோனி சிறிது நேரம் அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கினார்.
ஷாட் பிட்ச் பந்துகளை எளிதாக சமாளிப்பதற்காக இந்த பயிற்சியை சுமார் 45 நிமிடங்கள் சுரேஷ் ரெய்னா எடுத்துக்கொண்டார்.
0 comments:
Post a Comment