↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

இந்தியாவை முடக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையையும் படு பர்பெக்ட் ஆக செய்து, அதை ஒரு இம்மி கூட அதிலிருந்து அவர்கள் பிசகவில்லை. ஆனால் இந்தியா என்ன செய்தது... 

தென் ஆப்பிரிக்காவுக்கு இருந்த அந்த உணர்வு, வேகம், துடிப்பு கூட சற்றும் இல்லாமல் போய் விட்டது இந்தியாவிடம். பேய்த்தனமாக, வெறித்தனமாக ஆடியிருக்க வேண்டிய ஒரு போட்டியை, உத்வேகத்துடன் நடத்தியிருக்க வேண்டிய ஒரு சேஸிங்கை ஏதோ ஜஸ்ட் லைக் தட் போல இந்தியா நடத்தியது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி விட்டது.

இந்தியா இந்தப் போட்டியில் செய்த தவறுகள் நிறைய... 


டாஸ் வெல்ல முடியாமல் போனது, முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்காமல் போனது இயற்கை செய்த தவறு. 

பீல்டிங்கின்போது இந்தியாவின் பந்து வீச்சு சுத்தமாக திருப்திகரமாக இல்லை. 

சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமானதாக கருதப்படும் இந்த பிட்ச்சில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி விட்டனர். 

அஸ்வி்ன், ஜடேஜா ஆகியோரது பந்து வீச்சில் ரன்கள் குறைவாக கொடுத்தார்களே தவிர மொத்தமே ஒரு விக்கெட்தான் கிடைத்தது.

சுழற்பந்து வீச்சாளர்களால் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்த முடிந்தது வரலாற்று சோகம். இருப்பினும் அஸ்வினின் பந்து வீச்சு காரணமாகவே ஆஸ்திரேலியாவை சற்று மட்டுப்படுத்த முடிந்தது. இல்லாவிட்டால் 350க்கு மேல் போயிருக்கும் ஸ்கோர். 


ஆஸ்திரேலியாவின் பின்ச், ஸ்மித் பெரிய பார்ட்னர்ஷிப் போட நமது பந்து வீச்சாளர்கள் அனுமதித்தது பெரிய தவறு. 

பின்ச் நீண்ட நேரம் தடுமாறியபடி இருந்த நிலையில் அவரை அவுட்டாக்க நமது பந்து வீச்சாளர்களால் முடியாமல் போனது இன்னொரு தவறு. 

அஸ்வினை சற்று முன்னதாகவே பந்து வீச அழைத்திருக்கலாம். 

அதிகம் நம்பிய ஜடேஜா தன் மீது கேப்டன் டோணி வைத்த நம்பிக்கையை நிறைவேற்றத் தவறி விட்டார். 

வேகப் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசிய போதிலும் ரன்களை வாரிக் கொடுத்தது நிச்சயம் தவறு. 

உமேஷ் யாதவ் முதலில் அதிக ரன்களை வாரிக் கொடுத்தது நிச்சயம் தவறு.. அதுதான் பெரிய தவறும் கூட. இதற்கு முன்பு நடந்த சுற்றுப் போட்டிகள், காலிறுதிப் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய இந்திய பவுலர்கள் இன்று மொத்தமாக ஏமாற்றி விட்டனர். 

பீல்டிங்கில் செய்ததை விட இரண்டு மடங்கு தவறுகளை சேஸிங்கில் செய்தது இந்தியா. சேஸிங்கில் அவர்கள் செயல்பட்ட விதத்தை யாராலும் ஜீரணிக்கவே முடியாது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ரோஹித் சர்மா இருவரையும் குறை சொல்ல முடியாது. இருவருமே ஓரளவு நல்ல தொடக்கத்தையே கொடுத்தனர். 

விராத் கோஹ்லிதான் முதல் மிகப் பெரிய தவறு. பொறுப்பே இல்லாமல் ஆடினார் கோஹ்லி. போட்டியில் ஆஸ்திரேலியாவை வெளுக்காவிட்டால் இதுவரை பெற்ற வெற்றிகளுக்குப் பலனே இல்லை என்று சவடால் பேசியிருந்த கோஹ்லி கேவலமாக ஆடினார். 13 பந்துகளைச் சந்தித்த அவர் வெறும் ஒரு ரன்னில் அவுட்டானது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. இந்தியாவின் தொடர் வெற்றி நடைக்கு கோஹ்லிதான் முதல் கோணலாக அமைந்தார் என்பது வேதனையானது. 

கோஹ்லியைத் தொடர்ந்து அடுத்து வந்த வீரர்கள் சரியாக நின்று ஆடவே முயலவில்லை. சுரேஷ் ரெய்னா நம்பிக்கை அளித்தார். ஆனால் வீழ்ந்தார். 

ரஹானே போராடிப் பார்த்தார் முடியவில்லை. கேப்டன் டோணி தனி மனிதராக கடுமையாகப் போராடினார். 

பேட்டிங் பவர் பிளேயில் இந்தியா முதல் முறையாக இன்று விக்கெட்டைப் பறி கொடுத்தது. அதிக ரன்களையும் குவிக்க முடியாமல் போனது. 

அவரது போராட்டத்தில் ஒரு கால்வாசியையாவது முந்தைய வீரர்கள் செய்திருந்தால் நிச்சயம் இந்த ஸ்கோரை இந்தியா வெற்றிகரமாக சேஸ் செய்திருக்க முடியும். 

இதேபோன்ற பெயரிய ஸ்கோரை இந்தியா சேஸ் செய்துள்ள நிலையில் இன்று முன்னணி வீரர்களான கோஹ்லி, ரெய்னா ஆகியோரது அவுட்தான் இன்றைய வெற்றியைக் கெடுத்து விட்டது. 

ஆஸ்திரேலியா திட்டமிட்டு பேட்டிங் செய்தது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு சமாளித்தது பவுலிங்கிலும் திட்டமிட்டபடி அழகாக பந்து வீசினர். ஷார்ட் பந்துகள், பவுன்சர்கள், விக்கெட்டைக் குறி வைத்து பந்து வீசுவது என சிறப்பாக செயல்பட்டனர். 

உலகக் கோப்பைத் தொடரில் முதல் முறையாக இந்தியா ஆல் அவுட் ஆகியுள்ளது.முதல் முறையாக இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா அவுட்டாகியுள்ளது... அது அதன் வெளியேற்றமாக அமைந்து ரசிகர்களை வேதனைப்படுத்தியுள்ளது.

முதல் முறையாக இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா அவுட்டாகியுள்ளது... அது அதன் வெளியேற்றமாக அமைந்து ரசிகர்களை வேதனைப்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அன்று வெறியுடன் ஆடியதே, வேங்கையாக போராடியதே, அதற்கு பதிலடியாக நியூசிலாந்து வெறி கொண்டு ஆடியதே.... அதுதான் ஆட்டம்.. அதுதான் வேகம்.. அதுதான் ரசிகர்கள் எதிர்பார்த்ததும் கூட.. ஆனால் டோணி அன் கோவின் சேஸிங்கை எந்த வகையிலும் சேர்க்க முடியவில்லை...!

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top