↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் வங்கதேச அணியை வேண்டும் என்றே தோற்க வைத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியா-வங்கதேச அணிகள் மோதின. அப்போது துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா 90 ரன்கள் எடுத்த நிலையில் வங்கதேச வீரர் ருபேலின் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்தார். ஆனால் லெக் அம்பயரான அலீம்தார் அந்த பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டதால் நோ பால் என்றார். நிஜத்தில் அது இடுப்புக்கு மேல் வீசப்பட்ட பந்து அல்ல.
நோ பால் அறிவிப்பை அடுத்து தொடர்ந்து விளையாடிய ரோஹித் மேலும் 47 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் வங்க தேசத்தை இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் இது குறித்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில்,
அம்பயர்கள் மட்டும் தவறான முடிவை அறிவிக்காமல் இருந்திருந்தால் நாம் காலிறுதிப் போட்டியில் நிச்சயம் வெற்றி பெற்றிருப்போம்.
இன்ஷா அல்லாஹ் வங்கதேசம் எதிர்காலத்தில் வெற்றி பெறும். ஒரு நாள் வங்கதேசம் உலக சாம்பியன் ஆகும்.
வங்கதேச அணி வீரர்களே, தோல்வியை நினைத்து கவலைப்பட வேண்டாம். நம்மை எப்படி தோல்வி அடைய வைத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்காலத்தில் நாம் நிச்சயம் வெல்வோம்.
உலகக் கோப்பை தொடரில் வங்கதசே வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் தொடர்ந்து அது போல விளையாடுவார்கள் என நம்புகிறேன் என்று ஹசீனா தெரிவித்துள்ளார்.
Home
»
sports
»
sports.tamil
»
worldcup
» உலகக் கோப்பை: நாம் தோற்கவில்லை, தோற்க வைத்துவிட்டார்கள்: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment