பிரேசிலின் பாரா(Para) மாகாணத்தில் வெள்ளத்தால் திடீரென ஏற்பட்ட பள்ளம் ஒன்றில், அவ்வழியே சென்ற பேருந்து மாட்டிக்கொண்டுள்ளது.
பேருந்தின் பின்புற சக்கரம் மண்ணில் புதையத் தொடங்கியதும், சுதாகரித்து கொண்ட ஓட்டுநர் உடனடியாக பயணிகளை கீழே இறங்க செய்துள்ளார்.
இந்நிலையில் பயணிகள் இறங்கிய சில நொடிகளில் பேருந்து பள்ளத்தில் விழுந்து பின் சாலையின் மறுபுறத்தில் இருந்த கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
இதில் பேருந்தில் பயணம் செய்த அனைவரும் சிறு காயமும் இன்றி உயிர் பிழைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment