ஜோஹன்னஸ்பர்க் ஆர் டாம்போ சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் தென் ஆப்பிரிக்க அணி வந்து சேர்ந்தபோது, அங்கு திரளாக கூடியிருந்த ரசிகர்கள் வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
அணித்தலைவர் டிவில்லியர்ஸ், பாப் டு பிளஸ்ஸிஸ், பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், ஹாட்ரிக் விக்கெட் எடுத்த ஜேபி டுமினி உள்ளிட்டோருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டினர்.
வீரர்களும் ரசிகர்களிடம் இயல்பாக கலந்துரையாடினர். இந்த வரவேற்பு குறித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தனது பேஸ்புக் பக்கத்தில் படங்கள் பதிவு செய்துள்ளது.
இந்த புகைப்பங்களை பார்த்தவர்கள் தென் ஆப்பிரிக்க ரசிகர்களிடன் இருந்து பிறநாட்டு ரசிகர்கள், குறிப்பாக இந்திய ரசிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அவுஸ்திரேலிய அணியுடனான அரையிறுதியில் இந்தியா தோற்றவுடன் இந்திய ரசிகர்கள் வீரர்களை திட்டித் தீர்த்தனர். மேலும் போஸ்டர் எரித்தும், டி.வி.யை உடைத்தும் ரசிகர்கள் அடாவடியில் இறங்கினர்.
இந்திய அணித்தலைவர் டோனி, கோஹ்லி வீடுகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. வீரர்கள் தாயகம் திரும்புவதையும் ரகசியமாக வைக்க உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தென்ஆப்பிரிக்க ரசிகர்கள் தங்கள் வீரர்களை வரவேற்ற விதத்தை குறிப்பிட்டு அனைவரும் இந்திய ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment