உலகக்கிண்ணத் தொடரில் களவியூக கட்டுப்பாடுகள் துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக அமைந்தது. ‘பவர் பிளே’ இல்லாத நேரங்களில், உள்வட்டத்துக்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும்.
இதன் காரணமாக துடுப்பாட்டக்காரர்கள் ஓட்டங்களை குவித்து தள்ளினர். முதலில் துடுப்பெடுத்தாடிய அணிகளும் 300 ஓட்டங்களை சாதாரணமாக தாண்டி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
இந்நிலையில் இந்த களவியூக கட்டுப்பாடுகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று இந்திய அணித்தலைவர் டோனி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒருநாள் போட்டியின் நோக்கமே, ஒரு வீரர் 15 முதல் 35 ஓவர் வரை எப்படி செயல்படுகிறார் என்பதை பார்ப்பது தான். முதல் மற்றும் கடைசி 10 ஓவர் என்பது, ‘டி20’ போன்றது.
தற்போது உள்ள களத்தடுப்பு கட்டுப்பாடு சுழற்பந்துவீச்சாளர்களை அதிகமாக பாதிக்கிறது. ஏனெனில், கிரிக்கெட் போட்டியின் வரலாற்றை திரும்பிப்பார்த்தால், இரட்டை சதம் அடிக்கப்படவில்லை. அதே நேரம், சமீபத்தில் மட்டும் 3 இரட்டை சதம் பதிவாகியுள்ளது.
ஒருநாள் போட்டியில் அதிக சிக்சர், பவுண்டரிகள் அடிக்கப்படுகின்றன. இது `போராக’ இருக்கிறது. எனவே களத்தடுப்பு கட்டுப்பாடுகளில் மாற்றம் வேண்டும். இது எனது தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment