ஸ்பெயினின் பார்சிலோனா(Barcelona) நகரிலிருந்து, ஜேர்மனின் டுசெல்டார்ப் (Düsseldorf) நகருக்கு 150 பயணிகளுடன் சென்ற, ஜேர்மன் விங்ஸ் A320 German Wings என்ற விமானம், பிரான்ஸ் நாட்டின் Digne மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலியானவர்களில் 67 பேர் ஜேர்மானியர்களென்றும், 45 பேர் ஸ்பானியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
ஜேர்மானியர்களில் 16 பள்ளிக் குழந்தைகளும், 2 ஓபெரா பாடகர்களும் அடங்குவர்.
இந்நிலையில் விமானத்தில் பலியான நபர்களின் சடலங்கள் மலைப்பகுதி முழுவதும் சிதறிக்கிடக்கலாம் என மீட்புக்குழுவின் தளபதி David Galtier தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பலியான பள்ளிக் குழந்தைகளுக்காக ஜேர்மனியின் ஹால்டர்ன்(Halton) நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
விபத்து நடந்ததை கேள்விப்பட்டவுடன் இதயமே நொறுங்கி விட்டதாக மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment