கனடாவின் மொன்றியலில்(Montreal) உலகின் முதலாவது கூரையின் மேற்பரப்பு வர்த்தக தோட்டம்(World’s First Commercial Rooftop Green House) அமைக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற விவசாய நிறுவனமான Lufa Farms தொழிலதிபரான Mohamed Hage மற்றும் அவரது குழுவினரான Lauren Rathmell, Kurt Lynn மற்றும் Yahya Badran ஆகியோர் இணைந்து இந்த தோட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த தோட்டத்தில் ஆண்டுதோறும் 3,000ற்கும் மேற்பட்ட மொன்றியல் மக்களிற்கு தேவையான மரக்கறிவகைகளை பெறக்கூடியதாக இருக்கின்றது.
விளைபொருட்கள் தினமும் காலையில் அறுவடை செய்யப்பட்டு கூடைகளில் வாடிக்கையாளர்களிற்கு விநியோகிக்கப்படுகின்றது.
செயற்கை பூச்சி கொல்லிகள் எதுவும் பயன்படுத்தாது மறு சுழற்சி மழைநீர் மற்றும் இயற்கை வளங்களை உபயோகித்து பயிர்கள் வளர்க்கப்படுவது சிறப்பம்சமாகும்.





0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.